(Forbes News) ஃபோர்ப்ஸ் பத்திரிகை - ஆர்யா, சூர்யாவுக்கு இடமிருக்கு விஜய், அஜித்துக்கு இல்லையா?
சமீபத்தில் பிரபல இதழான ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2015க்கான 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்த இதழின் ஆண்டு இறுதி சர்வேக்களுக்காக பலரும் காத்திருக்கும் நிலையில் உண்மையில் மிகப்பிரபலமான நடிகர்கள், பிரபலங்கள் எனப் பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பட்டியலில் விஜய் , அஜித் உள்ளிட்டோருக்கு இடமில்லை. மேலும் விஜய் , அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக இந்தி நடிகர்களுக்கு சரிசமமாக ட்ரெண்டுகளை உருவாக்கியவர்கள். மேலும் இதில் தெலுங்கிலும் தனக்கென மெகா ரசிகர்கள் வட்டத்தைக் கொண்ட பவன் கல்யாணின் பெயரும் இடம்பிடிக்காத நிலையில் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதில் சிறப்பே ஸ்ருதி ஹாசன், காஜல் அகர்வால் பெயர்கள் முன்னிலையில் இருக்க ரஜினிகாந்தின் பெயர் இவர்களுக்கேல்லம் பின்னால் உள்ளது. மேலும் ஆர்யா, சூர்யா உள்ளிட்டோர் பெயர்களும் இதில் இடப்பிடித்திருப்பதுதான் ஆச்சர்யம்.
Comments
Post a Comment